தேவையான பொருட்கள்:- மாங்காய் வத்தல் - 8 துண்டுகள்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 10 பல்
- மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி
- தேங்காய்துருவல் - 3 தேக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைகரண்டி
செய்யும் முறை:- மாங்காய் வத்தலை 15 நிமிடம் சுடுத் தண்ணீரில் ஊற விடவும்.
- தேங்காயை அரைத்து
வைத்துக்கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை சிறு துண்டுகளாய் நறுக்கவும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- கடுகு, உளுத்தம்
பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
- மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும்.
- புளியை கரைத்து ஊற்றி அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
- மாங்காய்வத்தல், உப்பு சேர்க்கவும்.
- அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்க விடவும்.
சுவையான மாங்காய் வத்தல் ஊறுகாய் தயார். |
|