எலுமிச்சை ஊறுகாய்


தயாரிக்கும் அளவு: 1 படி கொள்ளவு

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1/2 கிலோ
வெந்தையம் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 10
கருவேப்பில்லை - 10 இலைகள்
எண்ணெய் - 50 மில்லி
இஞ்சி - 1 பல்லு
பெருங்காய பொடி - 1 தேக்கரண்டி
புளி தண்ணீர் - 2 புளி
எலுமிச்சை சார் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 10 கிராம்

தயாரிக்கும் முறை:
  1. எலுமிச்சை விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. வாணலியில் தேவையான உப்பு, மஞ்சள் அளவுடன் மெதுவான சூட்டில் வதக்கவும்.
  3. மின் அம்மியில் அல்லது பாக்கு உரல் வைத்து தேவையான அளவில் பசை செய்து கொள்ளவும்.
ஊறுகாய் மசாலா தயாரிக்கும் முறை:
  1. வெந்தையம், ஜீரகம், கடுகு, காய்ந்தமிளாகாய் உடன் வானலியில் வதக்கவும்.
  2. பிறகு மின்அம்மி வைத்து பொடியாக அடித்து வைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
  4. சீரகம், கடுகு, வெந்தையம் மற்றும் கருவேப்பில்லை சேர்க்கவும்.
  5. அதோடு இஞ்சி,  பெருங்காயப்பொடியை சேர்க்கவும்.
  6. அதோடு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. அதோடு மேலே தயாரித்த பசையை சேர்க்கவும்.
  8. சிறிது நேரம் மெல்லிய தீயுடன் வைக்கவும்.
  9. இதோடு அரைத்த பொடியை சேர்த்து கொள்ளவும்.
  10. இதோடு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
அடைப்பனுக்குள் வைக்கும் முன் இரண்டு நாட்கள் காற்றாட விடவும்.
சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார்.
ஒரு மாதத்திற்குள் பயன்படுத்தி முடிக்கவும்.
Comments