கருவேப்பில்லை துவையல்


தேவைப்படும் பொருட்கள்: (நான்கு பேருக்கு)

 1. பட்ட மிளகாய் - 10 எண்ணிக்கை
 2. கருவேப்பிலை  - 1 கொத்து
 3. சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
 4. புளி - 1 நெல்லி அளவு
 5. பூண்டு - 10 பல்லு
 6. உப்பு - தேவைகேற்ப

அரைக்கும் முறை:

 1. சமையல் எண்ணையை வாணலியில் ஊற்றவும்.
 2. பட்டமிளகாய், கருவேப்பிலை யை மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
 3. வதக்கியவுடன் சிறிது நேரம் ஆற வைக்கவும்.
 4. வதக்கிய பட்டமிளகாய், கருவேப்பிலையை புளியுடன் தேவையான உப்பின் அளவை சேர்த்து நன்றாக அம்மியில் வைத்து அரைத்து கொள்ளவும்.
 5. பிறகு பூண்டு  சேர்த்து நன்றாக அரைக்கவும்.
 6. சுவையான கருவேப்பில்லை துவையல் தயார்.
Comments