தேவையான பொருட்கள்:- 1. பச்சரிசி - 1 கப்
- 2. சிறு பருப்பு - 1/4 கப்
- 3. மிளகு - 1 தேக்கரணடி
- 4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
- 5. எண்ணெய், நெய் - 2 மேஜைக்கரண்டி
- 6. பெருங்காயம் - 2 சிட்டிகை
- 7. உப்பு - ருசிக்கு
- 8. தண்ணீர் - 4 - 4 1/2 கப்
- 9. முந்திரி - 5 (விரும்பினால்)
செய்முறை:
- அரிசி, பருப்பை ஒன்றாக கலந்து கழுவி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளிக்கவும்.
- இதில் பெருங்காயம் சேர்த்து உடனே அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
- இத்துடன்
உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் 1
விசில் விட்டு 15 நிமிடம் சிறுந்தீயில் வைத்து எடுக்கவும். அல்லது வழக்கம்
போல் 5 விசில் வைத்தும் எடுக்கலாம்.
- எடுத்ததும் நன்றாக ஒரு முறை கலந்து விடவும்.
|
|