இட்லி

இட்லிமாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி குண்டானில் வேக வைக்கவும்.

இட்லி மாவை பாதுகாக்கும் முறை:

குளிரூட்டிகளில் (Refrigerator or Fridge) வைக்கும் போது  ஈரத்துணியை போர்த்தி காற்று புகாத அடைப்பான்களில் வைக்கவும். குளிரூட்டிகள் ஈரப்பதம் உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே மாவில் உள்ள
ஈரப்பதம் குறைய வாய்ப்புகள் உண்டு. இதை சரி செய்ய சமைக்கும் போது சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

இட்லி மாவு தயார் செய்யும் முறை:


தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 4 பங்கு
உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) -  1 பங்கு
உப்பு - ருசிகேற்றவாறு

அரிசியை 6  மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2  மணி நேரம் ஊற வைக்கவும்.

முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.

அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.

குளிர் நாட்களில்:
மாவை புளிக்க வைக்க 12 மணி நேரம் அடுப்பருகில் அல்லது வெப்பமான இடத்தில் வைக்கவும்.

வெப்ப நாட்களில்:
அதிகம் வெப்பம் இல்லாத இடத்தில் 12 மணி நேரம் வைக்கவும்.

தற்போது இட்லி செய்ய மாவு தயார்.
Comments