தக்காளி ரசம்


பரிமாறும் எண்ணிக்கை: 4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1 எண்ணிக்கை
பூண்டு - 1 பள்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு (பெருஞ்சீரகம்) - 1/2 தேக்கரண்டி
மிளகு - 5 எண்ணிக்கை
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 3 இலைகள்
மல்லிதழை - தேவைகேற்ப
முழு பட்டமிளகாய் - 2 எண்ணிக்கை
உப்பு - தேவைகேற்ப

சமைக்கும் முறை:

 1. சோம்பு, சீரகம் நன்றாக போடி செய்து கொள்ளவும்.
 2. மிளகை இடித்து அந்த பொடியுடன் சேர்க்கவும்.
 3. அந்த பொடியுடன் தட்டிய பூண்டை சேர்க்கவும்.
 4. தண்ணீருடன் தக்காளியை சேர்த்தது கரைத்து கொள்ளவும்.
 5. அதனுடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொள்ளவும்.
 6. அதனுடன் மேலே அரைத்த பொடியை சேர்த்து கொள்ளவும்.
 7. வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு வெடிக்க விடவும்.
 8. அதனுடன் கருவேப்பில்லை சேர்க்கவும்.
 9. அதோடு முழு பட்டமிளகாய் சேர்க்கவும்.
 10. அதனுடன் தயாரித்த கரைசலை சேர்க்கவும்.
 11. சிறுது நேரம் மெல்லிய சூட்டில் வைத்து அதனுடன் மல்லிதழையை சேர்க்கவும்.
 12. சுவையான காசாங்காடு கிராம ரசம் தயார்.

Comments