தேவையான பொருட்கள்:(4 குவளை) ஆட்டு நெஞ்செலும்பு - 1/2 கிலோ மிளகாய் - 6 எண்ணிக்கை மல்லிமாவு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 மேசைகரண்டி பூண்டு - 2 பள்ளு மிளகு - 25 எண்ணிக்கை சின்ன வெங்காயம் - 5 எண்ணிக்கை நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை:- மிளகாய், மல்லிமாவு, சீரகம், பூண்டு, மிளகு அனைத்தையும் வைத்து அம்மியில் நேவாக அரைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணையை ஊற்றி மிதமான சூடு நிலையில் வைக்கவும்.
- அதனுடன் வெங்காயம், ஆட்டு நெஞ்செலும்பு சேர்த்து வதக்கவும்.
- அரைத்த கரைசலை வதக்கிய நெஞ்செலும்புடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
- சூடான ஆட்டு நெஞ்செலும்பு ரசம் தயார்.
|