சுழியன்


தேவையான பொருட்கள்:

கொண்டைகடலை அரிசி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய் - 1/4 மூடி
மைதாமாவு - 1/4 கிலோ
சமையல் எண்ணெய் - 1/2 லிட்டர்
ஏலக்காய் - 3

சமைக்கும் முறை:

1. கொண்டக்கடலை அரிசியை உப்பு போட்டு வேக வைத்து , தண்ணீரை வடிக்கவும்.
2. சர்க்கரையை - பாகு செய்து வைத்து கொள்ளவும்.
3. தேங்காய், ஏலக்காய், சர்க்கரை (பாகு)  மூன்றையும் சேர்த்து வேக வைத்த கொண்டக்கடலை அரிசியில் சேர்த்து கிண்டவும்.
4. நன்றாக கிளறிய பிறகு உருண்டை பிடிக்கவும்
5. மைதா மாவு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
6. வாணலியில் தேவையான எண்ணையை விட்டு மிதமான சூடு செய்து கொள்ளவும்.
7. உருண்டையை எடுத்து மைதாவில் நனைத்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
8. வெளியில் உள்ள மைதா சிறிது செந்நிறமாக வரும் வரை பொரிக்கவும்.
9. சுவையான காசாங்காடு கிராம சுழியன் தாயார்.