பகிர்ந்தளிப்பாளர்: திருமதி. முத்துசெல்வி கண்ணையன்சமைக்க ஆகும் நேரம்: 25 நிமிடங்கள்தேவையான பொருட்கள்:வெந்தைய கீரை - ஒரு கட்டு துவரம் பருப்பு - நான்கு கை அளவு நடுத்தரமான வெங்காயம் - 1 நடுத்தரமான தக்காளி - 1 பச்சை மிளகாய் - 10 எண்ணிக்கை புளி - ஒரு எலுமிச்சை அளவு மஞ்சள் - 1/4 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி (விருப்பமுள்ள எண்ணெய் பயன்படுத்தலாம்) கடுகு - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்றவாறு செய்யும் முறை:- வெந்தைய கீரையை கழுவி, இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், தண்டினை அகற்றி விடவும்.
- அழுத்த சமையல் கலனில் (Pressure Cooker) துவரம் பருப்பு, வெந்தைய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 250 மில்லி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
- நான்கு சீட்டி (whistle) வரும் வரை காத்திருக்கவும்.
- நீராவி அழுத்தம் அடங்கும் வரை காத்திருக்கவும். (10-15 நிமிடம்)
- பிறகு சமையல் கலனை திறந்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- மத்து கட்டை அல்லது மசி கட்டை கொண்டு நன்றாக கொதித்த கரைசலை மசிக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும், கருவேப்பில்லை சேர்க்கவும். (தாளிப்பதற்கு வேறு ஏதேனும் தாங்கள் பயன்படுத்த விரும்பினால் அதையும் சேர்க்கலாம்)
- ஒன்று நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.
- சுவைக்கு சிறிது மல்லி தலைகளை சேர்த்து கொள்ளுங்கள்.
- சுவையான வெந்தைய கீரை கடையல் தயார்.
|