தேவையான பொருட்கள்:(4 பேருக்கு) தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்) பச்சைமிளகாய் - 3 சிறிய வெங்காயாம் - 7 இஞ்சி - அரை விரல் நீளம் கடுகு - 1/2 தேக்கரண்டி கருவேப்பிலை - 5 இலைகள் எண்ணெய் - தேவைகேற்ப உப்பு - தேவைகேற்ப சமைக்கும் முறைகள்:- தேங்காய், பச்சைமிளகாய், சிறிய வெங்கயாம் - 2, இஞ்சி போன்றவற்றை அம்மியில் வைத்து நேவாக அரைக்கவும்.
- தேவையான அளவிற்கு மேலே அரைத்ததில் தண்ணீரை சேர்க்கவும்.
- அடுப்பில் மிதமான சூடுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பில்லை, வெங்காயம் கொண்டு வதக்கவும்.
- ஒரு நிமிடம் வதக்கியவுடன் மேலே அரைத்ததை கொண்டு தாளிக்கவும்.
- சுவையான காசாங்காடு கிராம தேங்காய் சட்னி தயார்.
|
|