முட்டை குழம்பு

அடைவார்த்து முட்டை குழம்பு வைக்கும் முறை:

உடைத்து விட்ட முட்டை  குழம்பு: (முத்துசெல்வி, மேலவீடு)

தேவையான பொருட்கள்: (நான்கு நபர்களுக்கு)

முட்டை - 4
வெங்கயாம் - 1 குவளை
தக்காளி - 2
உருளைகிழங்கு - 1
முருங்கைக்காய் - 1
மல்லித்தூள் - 3 மேஜைகரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேஜைகரண்டி
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
சோம்புபொடி - 1 தேக்கரண்டி
மஞ்சப்பொடி - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1  கொத்து
துருவிய தேங்காய் - 1/2 குவளை
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

சமைக்கும் முறை:

  1. துருவிய தேங்காய், மிளகாய்த்தூள், சீரகப்பொடி, சோம்புபொடி , மஞ்சப்பொடி, மல்லித்தூள், ஒரு சிறிய வெங்காயம், சிறிதளவு தண்ணீர் இவைகள் அனைத்தயும் சேர்த்து நேவாக அரைத்து கொள்ளவும்.
  2. சமைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து (அடுப்பை மறக்காமல் பத்த வைக்கவும்) அதில் எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
  3. வெட்டிய வெங்காயம் தக்காளி இவைகளை அடுப்பில் இருக்கும் பத்திரத்தில் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி, பிறகு உருளைகிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  4. தேவையான அளவு உப்பு, அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  5. குழம்பு கொத்தித்தவுடன் முட்டைகளை உடைத்து நேரடியாக ஒரே இடத்தில் ஊற்றமால் குழம்பில் சேர்க்கவும்.
  6. குழம்பை இரண்டு நிமிடம் மூடி வைத்து அடுப்பை அனைத்து விடவும்.
Comments