English (Automatic Translation By Google) ஆரோக்கியாமான உடலுக்கு சத்தான உணவு மிகவும் அவசியம். கிராமத்தின் முக்கியமான விழா காலங்களில் சமைக்கும் முறைக்கும் இதில் பகிர்ந்து கொள்ளப்படும். சமையல் இணையம் தொடங்குவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இருப்பினும் மூன்று முக்கிய காரணங்கள். 1. வளர்ந்து வரும் நாகரிக உலகில் குடும்பங்களை பிரிந்து வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் தனியாக இருந்து வாழ வேண்டிய சூழ்நிலையில் சமைக்க வேண்டிய கட்டாயமாகின்றது. அவர்களுக்கு இவை உதவியாக இருக்கும் என நம்புகிறோம். 2. நம் கிராமத்தின் சமையல் சுவைகளை மற்றவர்களும் தெரிந்து கொண்டு சுவைகட்டுமே. 3. சமையலுக்கு எத்தனை இணையத்தளம் இருந்தாலும், நம் கிராம சமையல் தான் நம்மில் நிறைய பேருக்கு விருப்பம். அதையும் பூர்த்தி செய்வதே இந்த தளத்தின் நோக்கம். நீங்கள் செய்யும் சமையலில் ஏதானும் புதிதாக செய்தால் அந்த உணவு செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. காசாங்காடு இணைய குழு |